நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் விஷம் அருந்தி உயிரிழப்பது போன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டம் செயல்படுத்தப்படாது என்ற அமைச்சர்களின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 19வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் பூச்சிக்கொல்லியை உட்கொண்டு உயிரிழப்பது போன்று நடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.