திங்கள், 1 மே, 2017

சார்க் நாடுகளின் ஒருமித்த வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்! May 01, 2017




சார்க் நாடுகளின் ஒருமித்த வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் ஜி-சாட்-9  செயற்கைக்கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு சார்க் நாடுகள் கூட்டத்தின் போது, சார்க் நாடுகளின் வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் செயற்கைக்கோள் ஏவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதன்படி 235 கோடியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

ஆனால், இந்த திட்டத்திலிருந்து பாகிஸ்தான் விலகியதையடுத்து, சார்க் நாடுகளின் செயற்கைகோள் என்ற பெயர், தெற்காசிய நாடுகளின் செயற்கைகோள் என மாற்றப்பட்டது. 

இதனையடுத்து வரும் மே 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. இதன் மூலம் தகவல் பரிமாற்றம், தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவற்றை சார்க் நாடுகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.