வியாழன், 18 மே, 2017

300 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை தூர் வார அரசு நடவடிக்கை! May 18, 2017

300 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை தூர் வார அரசு நடவடிக்கை!


அடுத்த வாரத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆயிரத்து 519 ஏரிகளில் குடிமாராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அத்துடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 220 ஏரிகளை தூர்வாரவும் தமிழக அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

மேலும், அடுத்த வாரத்திலே மேட்டூர் அணை தூர்வாரப்படும் என்ற அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்நிலையில் வறட்சி நிவாரண நிதிப்பட்டியலில் இருந்து விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதாகவும் முதல்வர் கூறினார். 

Related Posts: