அமெரிக்காவில், விஷப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை அந்த பாம்பு கடித்துவிட்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ‘ரேட்டில் ஸ்னேக்’ எனப்படும் கடும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, முத்தம் கொடுக்க முயன்ற அவரின் வாயில் பாம்பு கடித்துள்ளது.இதையடுத்து விஷம் உடல் முழுவதும் பரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உள்ள சிறுவனக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து, பாம்பு கடிபட்டவரின் நண்பர் கூறுகையில், “ என் நண்பன் பாம்புடன் விளையாடுவதற்கு முன்பு கொஞ்சம் மது அருந்தியிருந்தான். பாம்பை பார்த்தவுடன் எந்த பயமும் இல்லாமல் அத்துடன் விளையாட ஆரம்பித்தான். நான் சற்றும் சுதாரிக்காத வகையில் தீடிரென அந்த பாம்புக்கு முத்த கொடுக்க முயன்றான். உடனே பாம்பு அவனின் வாயில் கடித்துவிட்டது” என தெரிவித்தார். விளையாட்டுத்தனமாக இளைஞர் செய்த செயல் அவரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது.