வெள்ளி, 26 மே, 2017

31,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்! May 26, 2017

இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ் 31,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, வேதாந்தா, ரிலையன்ஸ் , அதானி போர்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் கைமாறின. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் முதல் முறையாக 31000 புள்ளிகளை தொட்டது.தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 9592 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்தது

கடந்த சில நாட்களாக இந்திய எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் காரணாமாக ஏற்பட்ட பதற்ற நிலையால் பங்குச்சந்தை இறக்கத்துடம் காணப்பட்டது. இந்நிலையில், இன்று ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்ட பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 31,028 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையான நிப்டி  85.35 புள்ளிகள் அதிகரித்து 9,595 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: