ரேன்சம் வைரஸ் பணப்பரிமாற்றம் செய்ய பயன்படுத்திய 'Bitcoin'-இன் விலை, ஒரு சரவன் தங்கத்தின் விலையை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது.
ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். இதுவரை 4 லட்சம் கணினிகளுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் ‘cryptocurrency’ முறையின் மூலம் தான் கேட்கும் பணத்தை இணைய வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்கும். அனுப்பாதபட்சத்தில் கணினியில் இருக்கும் தகவல்களை அழித்துவிடும் அல்லது தானே எடுத்து பயன்படுத்திக்கொள்ளும்.
'Bitcoin' எனப்படும் டிஜிட்டல் பேமண்ட் முறையில்தான் ரேன்சம் வைரஸ் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை நடத்தி வந்தனர். பிட்காய்ன் என்பது டாலர், ரூபாயைப் போன்ற ஒரு நாணய முறையாகும். இந்த நாணயம் ரூபாயை போன்று பொருளாக இல்லாமல் இணையத்தில் பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒரு எண்ணிம வடிவாக இருக்கும்.

இணைய வழியாக பணம் செலுத்தி இந்த பிட்காய்னை வாங்கும் ஒரு நபர், முகம் தெரியாத இன்னொரு நபருக்கு இணையத்தின் மூலமாக இந்த பிகாய்னை பரிமாறிக்கொள்ளமுடியும். அந்த பிட்காய்னை பெரும் நபர் தங்கள் நாட்டின் கரன்சிக்கு ஏற்ப மற்றொரு நபரிடம் அதை பணமாக மாற்றிக்கொள்ளமுடியும். இணையத்தில் பிட்காய்னை பயனபடுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் அதை எளிதாக பணமாக மாற்றிக்கொள்ளமுடியும்.
பெரும்பாலும் சட்டவிரோதமாக தொழில் செய்பவர்களே இந்த முறையின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக இணைய ஹாக்கர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனது பிட்காய்ன். இந்நிலையில், உலக நாடுகளை பதறவைத்த 'wannacry ransomware' வைரஸும் இந்த முறையை பயன்படுத்தியே தங்களின் பணப்பறிமாற்றத்தை மேற்கொண்டது. இதனால், இந்திய ரூபாய் மதிப்பின்படி ஒரு பிட்காய்னின் தற்போதைய விலை 16,0791 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெளியான தகவலின் படி பிட்காய்னின் மொத்த வருவாய் 24,000 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் 1,28,450 ரூபாயாக இருந்த இரு பிட்காய்னின் மதிப்பு, ஒரே வாரத்தில் 32,000 ரூபாய் உயர்ந்துள்ளது. ‘சாத்தொஷி நாகமோடோ’ என்ற பெயரில் முகம் தெரியாத நபரின் மூலம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது கோடிகளை குவித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு லன்டனை சேர்ந்த ஆண்டி வைரஸ் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி 'wannacry ransomware' வைரஸின் பிட்காய்ன் கணக்கில் வெறும் 55 லட்சம் ரூபாய்தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நில்லையில் பிட்காய்னின் வருவாய் ஏகபோகத்துக்கும் உயர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.