நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், மத வழிபாட்டிற்காக மாடுகளை பலியிடவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசு, காளை, எருது, ஒட்டகம் உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கன்றுகளை சந்தைகளுக்கு கொண்டு வரக் கூடாது என்றும், மாட்டு சந்தைகளில் விவசாயிகள் மட்டும் மாடுகளை விற்கலாம் என்றும், அவ்வாறு விற்பவர்கள் தங்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை சந்தை நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இனி சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்கவோ, வாங்கவோ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இறைச்சிக்காக மாடுகளை இனி யாரும் விற்கவோ வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் மாட்டு இறைச்சி விற்பனை கடைகளை மூடும் சூழல் உருவாகியுள்ளது.
மிருகவதை தடுப்பு சட்டத்தில், மாடுகள் வர்த்தகத்திற்கான விதிமுறையில் மாற்றம் செய்து, மத்திய அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மத வழிபாட்டிற்காகவும் மாடுகளை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 23 -ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.