ஞாயிறு, 14 மே, 2017

ஏமாறாதே! ஏமாற்றாதே! இது ஒரு சிறிய விழிப்புணர்வு பதிவு :

ஏமாறாதே! ஏமாற்றாதே! இது ஒரு சிறிய விழிப்புணர்வு பதிவு :+ பிரபலமான நகைக்கடையில்(ஜாய் ஆலுக்காஸ்) எனது மனைவி 11 மாத நகை சீட்டு பணம் கட்டி வந்தார். அது முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று போய் நகை (நெக்லஸ்) வாங்கி வந்துள்ளார். 11 மாதம் 2000 ஆயிரம் கட்டியதற்கு 22000 + 2000 ( 11 மாதம் நகை கட்டியதற்கு இது அவர்கள் தரும் போனஸ்) ஆக மொத்தம் 24.000. எனது மனைவி 2.1/4 (18.790 கிராம்) பவுனில் நெக்லஸ் எடுத்துள்ளார். நேற்றைய ஒரு கிராமின் விலை 2.645 ரூபாய் 18.790 கிராமின் மொத்த விலை 49.610 + 1 பெர்சென்ட் Tax - 584 ஆக மொத்தம் - 50.195 ஆனால் அவர்கள் கேட்ட தொகை 61.300 ரூபாய். எனது மனைவியும் சாமர்த்தியமாக பேரம் பேசி 59.000 ஆயிரத்திற்கு 2.1/4 பவுன் நெக்லஸை வாங்கி வந்து என்னிடம் காண்பித்தார். நான் கணக்கு போட்டு சொன்ன பிறகுதான். 2.1/4 பவுன் நகைக்கு செய்கூலி & சேதாரம் என்ற பேரில் 8.800 கூடுதலாக கொடுத்துள்ளதை உணர்ந்தார். ஒரளவு விபரம் தெரிந்த எங்களுக்கே இந்த நிலை என்றால்?ஒரு விபரமும் அறிந்திராத எத்தனை பேர்கள் இவர்களைப்(கல்யாண், ஜோஸ் ஆலுக்காஸ், லஷ்மி Etc. Etc) போன்றவர்களிடம் ஏமாந்து இருப்பார்கள்? :+
No automatic alt text available.