ஞாயிறு, 14 மே, 2017

மீலாது விடுமுறை நீக்கம்: எந்தத் தவறும் இல்லை

மீலாது விடுமுறை நீக்கம்: எந்தத் தவறும் இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இஸ்லாத்தில் பண்டிகைகள் அல்லது திருநாள்கள் என்பன இரண்டே இரண்டுதான்.
ஒன்று ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ரமளான் பண்டிகை.
இரண்டாவது, தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பண்டிகை.
அவ்வளவுதான்.
இந்த இரண்டைத் தவிர வேறு எந்தப் பண்டிகையும் இஸ்லாமிய வாழ்வியலில் இல்லை.
ஆகவே உபி அரசு மீலாது விடுமுறையை நீக்கியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. அது எதிர்க்கப்பட வேண்டிய விஷயமும் அல்ல.
நான் அறிந்தவரை, இந்தியாவில் எந்த முஸ்லிம் அமைப்பும் எந்த இஸ்லாமிய இயக்கமும் மீலாதுக்கு விடுமுறை வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை
.
காரணம், மீலாது என்பது பண்டிகை அல்ல என்பதால்தான்.
ஆகவே உபி அரசு மீலாது விடுமுறையை நீக்கியிருந்தால் அதில் தவறு ஒன்றுமில்லை.
-சிராஜுல்ஹஸன்

Related Posts: