உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இன்று தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கடும் அமளி ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ராம் நாயக்கின் சிறப்புரையுடன் இன்று தொடங்கியது.
அப்போது, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநரின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியினர், காகிதங்களை சுருட்டி அவரை நோக்கி வீசியெறிந்தனர். ஆளுநரின் மீது காகிதங்கள் விழாத வகையில் சபைக் காவலர்கள் தடுத்தனர்.
இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் எச்சரித்தார். எனினும், அவரது கோரிக்கையை கண்டுகொள்ளாத உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.

http://kaalaimalar.in/yogi-govt-assembly-congress-samajwad-on-action/