உலகின் பெரும்பாலான நாடுகளை பதறவைத்துக்கொண்டிருக்கும் ‘wannacry ransomware' வைரஸ் இந்தியாவில் 48 ஆயிரம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்தியாவை சேர்ந்த ஆண்டி வைரஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இணைய பாதுகாப்பு ‘புரோகிராம்களை’ உருவாக்கும் இந்தியாவை சேர்ந்த ‘Quick Heal’ நிறுவனம் வெளியிட்ட தகவலில், ‘இதுவரை இந்தியா முழுவதும் 48 ஆயிரம் இணைய தாக்குதல்கள் ’Wannacry Ransomware' வைரஸால் நடத்தப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளது. ரேன்சம் வைரஸானது வாடிக்கையாளர்களைக் காட்டிலும், பெரும்பாலும் நிறுவனங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்துவதாகவும் ‘quick heal' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 700க்கும் மேற்பட்ட தங்களின் வாடிக்கையாளர்கள், தங்களுடைய சேவை மையத்தை தொடர்பு கொண்டு, வைரஸ் தாக்குதல் குறித்து புகார் அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு,மேற்கு வங்கம், குஜராத்,மகாராஷ்ட்ரா, ஒடிஸா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான தாக்குதல் முயற்சிகள் நடைபெறுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பெரும்பாலான நபர்கள் ஆன்லைன் பரிமாற்றத்திற்கு மாறும் வகையில் நிர்பந்திக்கப்பட்டனர். இந்நிலையில் உலகநாடுகள் முதற்கொண்டு இந்தியாவையும் அச்சுறுத்தும் இந்த சைபர் தாக்குதலால் பெரும்பாலான மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், இந்தியாவில் அதிக அளவில் இணையபாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த அளவிலான தாக்குதல்களே இங்கு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.