புதுடில்லி: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், சுப்ரீம் கோர்ட்டில், ‘ மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் போது, முத்தலாக்கை பயன்படுத்த கூடாது என மணமகனிடம் தெரிவிக்க வேண்டும் என மதகுருமார்களுக்கு ஆலோசனை அளிக்கப்படும்’ என, தெரிவித்துள்ளது.
முத்தலாக் குறித்து சுப்ரீம் கோரட்டின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:
மணமகனிடம், ஒரு நேரத்தில் மூன்று முறை முத்தலாக் கூற கூடாது என தெரிவிக்க வேண்டும் என மதகுருமார்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்படும். இந்த ஆலோசனை இணைய தளம், பத்திரிகை வெளியீடுகள், சமூக வலை தங்கள் மூலம் தெரிவிக்கப்படும். ஷரியத் சட்டப்படி அது தவறான நடவடிக்கை என மணமகனிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.