வெள்ளி, 19 மே, 2017

ஜாகிர் நாயக் ட்ரஸ்ட் மூலம் இயங்கிய பள்ளியை எடுத்து நடத்த சமாஜ்வாதி தலைவர் முடிவு!

மும்பை(19 மே 2017): ஜாகிர் நாயக்கின் Islamic Research Foundation (IRF) ட்ரஸ்ட் மூலம் இயங்கிய பள்ளியை சமாஜ்வாதி தலைவர் அபு அஜ்மி எடுத்து நடத்த முடிவு செய்துள்ளார்.
இஸ்லாமிய மத பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக் மீதும் அவரது ட்ரஸ்ட் மீதும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் அவரது தலைமையில் கீழ் இயங்கி வரும் பல்வேறு ட்ரஸ்ட்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மும்பையின் மேகஜோன் பகுதியில் ஜாகிர் நாயக்கின் ட்ரஸ்டின் கீழ் இயக்கிய பள்ளி ஒன்றை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஜ்மியின் ட்ரஸ்டின் கீழ் கொண்டு வந்து அந்த பள்ளியை இயக்க முடிவு செய்துள்ளார்.
முன்னதாக ஆசின் திடீர் நடவடிக்கையினால் ஜாகிர் நாயக்கின் கீழ் இயங்கும் இந்த பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து கவலையடைந்தனர். இந்நிலையில் இப்பள்ளியை அபு அஜ்மி எடுத்து நடத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் இந்த பள்ளிக்கும் ஜாகிர் நாயக்கின் ட்ரஸ்ட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அபு அஜ்மி தெரிவித்தார்.
Samajwadi Party leader Abu Azmi has taken over the Islamic International School (IIS), located in Mumbai’s Mazgaon, which was earlier run by Zakir Naik’s Islamic Research Foundation (IRF) for the welfare of the students.

Related Posts: