வியாழன், 25 மே, 2017

ஷகாரான்பூர் கலவரம்: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!


லக்னோ: உ.பி.யில் ஷகாரான்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இரு பிரிவினரிடையே மோதல் உ.பி.யின் மேற்கு மாவட்டம் ஷகாரான்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வந்தார்.அப்போது நடந்த சில கைகலப்பு முன்விரோதமாக மாறியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தலித் மற்றும் ராஜ்புத் ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது.இந்நிலையில் உ.பி. உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், ஷகாரான்பூர் டி.ஜி.,பி. ஷகாய், போலீஸ் கமிஷனர் சுபாஷ் சந்திர துபே, மாவட்ட கலெக்டர் என்.பி. சிங் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்

Related Posts: