வியாழன், 11 மே, 2017

உலகெல்லாம் புகழ்பரப்பும் முருங்கை! அமெரிக்கா இதனையும் உரிமை கேட்கிறது.


நாட்டு மருந்துகளுக்கு புகழ் பெற்ற சீனாவில்கூட தற்போது முற்றிய முருங்கைக்காயின் காய்ந்த விதைதான் இனிப்பு நோயினைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மலேசியா, சிங்கப்பூர்களில் மலாய்க்காரர்கள், சீனர்கள் ஒரு கிலோ முருங்கை விதை ரூ1500க்கு மேல் விலை கொடுத்து வாங்கி, டீ போல் கசாயம் செய்து குடிக்கிறார்கள். தற்போது விட்டமின் குப்பிகளை விற்கும் அனைத்து புகழ்பெற்ற நிறுவனங்களுமே, முருங்கை இலையினைக் காயவைத்து பொடி செய்து கேப்சூல் வழி விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாறிக்கிறார்கள். எனது ஆந்திர நண்பர் ஒருவர் முருங்கை இலைகளைச் சேகரித்து பொடி செய்து லண்டனுக்கு அனுப்பும் தொழிலினைச் செய்து பொருளீட்டி வருகிறார்.
நெல்லிக்காய் பொடி, பிரண்டை பொடிகளைப் போல் இப்போது முருங்கைப் பொடியும் பிராண்ட் பெயருடன் இந்தியாவிற்கே வந்து ஒரு குப்பி 550 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
நாமோ இன்னும் இதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் எனது வீட்டில், என் மனைவியிடம் ஒரு கட்டளையாகவே (கெஞ்சித்தான்) சொல்லி, வாரமொருமுறை முருங்கைக்கீரை சமைக்கச்சொல்லி பிள்ளைகளுக்குக் கொடுத்து வருகிறோம். ஏதோ முருங்கைக் காயின் ருசியினால் மட்டும் அவ்வப்போது அதன் மருத்துவ குணம் அறியாமல் சாப்பிட்டு வருவது சிறந்ததாய் இருக்கிறது.
முருங்கை இலை, காய், பூ, விதை என இம்மரத்தின் பிசான்கூட அருமருந்தாகும். இதன் சாற்றினை இப்போது பல்வேறு குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே, கண்முன் இருக்கின்ற நல்லவைகளை விட்டுவிட்டு மருத்துவத்தில் தரப்படும் இதன் சாற்றினை விலை கொடுத்து வாங்காதீர்கள்.
நமக்கு நம் முன்னோர் விட்டுச்சென்ற அருமருந்து உணவுகளில், வரும்முன் காக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று!
படித்தோம், பகிர்ந்தோம் என்றில்லாமல் நீங்களும் உங்கள் இல்லங்களில் கட்டளையிட்டாவது (!!!) முருங்கைக் கீரையினை உணவில் சேர்க்கும் முறையினைப் பின்பற்றுங்கள்.
இதில் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவினைக் காணுங்கள்...!

Related Posts: