வெள்ளி, 12 மே, 2017

ஒரே பிராவ்சரில் ஆப்-களை இயக்கும் வசதிகளை கொண்டு வந்த ஒபேரா May 11, 2017




மெசஞ்சர், வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் அனைத்தையும் ஒரெ பிராவ்சரில் கொண்டு வந்துள்ளது ஒபேரா (Opera).

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் ஃபோன் மூலமே தங்களது உறவுகளுடன் நெருங்கி பழகி வருகின்றனர். மேலும் அலுவலக பணிகள், வியாபார விவரங்கள் போன்ற அனைத்தையும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் இயங்கும் செயலிகளை கொண்டே உபயோகிக்கின்றனர். ஆனால் தனித்தனியே ஒவ்வொரு ஆப்-களை இயக்க வேண்டி வருவதால் சிரமம் ஏற்படுகிறது. இதனிடையே இந்த சிரமத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஒபேரா.
 
மேம்படுத்தப்பட்ட ஒபேராவில், பல செய்தி மற்றும் குறுஞ் செய்திகளை அனுப்பும் ஆப்புகளை ஒருங்கினைத்து ஒரே தளத்தில் கொண்டு வந்துள்ளது ஒபேரா. ஒபேராவை பதிவிறக்கம் செய்வதன் மூலம், ஒரே நேரத்தில், ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸாப், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து ஆப்புகளையும் சுலபமாக கையாள வசதியாக அமைகின்றது. 


இதனால், ஒவ்வொரு சேவையையும் தனித்தனியே போய் பயண்படுத்தும் விதத்தை எளிமையாக்கியுள்ளது ஒபேரா. அப்புறம் என்ன உங்கள் பிரியமானவர்களிடம் ஒரே நேரத்தில் இணைப்பில் இருந்து மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்ளுங்கள். 

Related Posts: