ஞாயிறு, 21 மே, 2017

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவலை எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் மிஸ்ரா வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல்களை இனி காணலாம்….

➤இந்தியாவில் 33 நொடிக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கிறார். 

➤55 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களில் 50 % பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். 

➤40 வயதுக்கு உட்பட்டவர்களில் 25 % பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். 

➤ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். 

➤உலகளவில் இயற்கையாக இறந்தவர்களில் அதிமானோர் மாரடைப்பால் மரணம் என தகவல்.

➤நீரழிவு நோய்,உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் அதிகரிப்பு போன்றவையால் மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. 

➤புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

➤கிராமங்களை விட நகரத்தில் வாழும் ஆண்கள் மூன்று மடங்கு மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்.

Related Posts: