தேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் வெளியே வருகிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறி, வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி வைகோ நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 50 நாட்களாக வைகோ சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். அதற்கு தமிழக காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
மேலும் சொந்த ஜாமீனில் வைகோவை வெளியே விடலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வைகோவை சொந்த ஜாமீனில் விடுவித்து நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு சிறைத்துறைக்கு வழங்கப்பட்டு, முறைப்படி இன்று சிறையில் இருந்து அவர் வெளியே வர உள்ளார்.