வியாழன், 25 மே, 2017

குஷ்பு தமிழிசை சவுந்திரராஜன் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர்!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிற்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கும் ட்விட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழிசை சவுந்திரராஜனின் அறிக்கையை படித்ததாகவும், கட்சிகளின் கொள்கையைப் பார்த்து தங்களது சொந்தவிருப்பத்தின் பெயரில் அதில் சேரவேண்டும். ஆனால் நீங்கள் ரஜினிகாந்திடம் கடந்த 3 வருடங்களாக  வெளிப்படையாக கெஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். என் சொந்த விருப்பத்தின் பேரில் தான் நான் காங்கிரசில் இணைந்தேன் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நான் காங்கிரசில் சேரவேண்டும் என்று விரும்பியே இணைந்தேன் என்னை காங்கிரசில் சேர சொல்லி யாரும் கேட்கவில்லை, தூதுவரையும் அனுப்பவில்லை.உங்களைப் பார்க்கும் போது நான சரியான முடிவைதான் எடுத்திருக்கிறேன் என்று ட்வீட்செய்திருந்தார்.



குஷ்புவின் ட்வீட்டிற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் தங்களை சேர்க்க காங்கிரசிலிருந்து தூதர்கள் வரவில்லை ஆனால் தங்களை திமுகவிலிருது துரத்துபவர்கள் இருந்தார்களே என்று குறிப்பிட்டிருந்தார் மேலும், நீங்கள் காங்கிரசில் சேர்ந்தீர்களா? அல்லது தாவினீர்களா? திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தது சிறந்த கொள்கை? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆனால் எந்த கொள்கையின் அடிப்படையில் சேர்ந்தீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.





தமிழிசையின் பதிலுக்கு விளக்கமளித்த குஷ்பு, உங்களது மூளையை கொஞ்சமாவது பயன்படுத்துங்கள். நான் திமுகவிலிருந்து விலகி 6 மாதங்களுக்கு பிறகுதான் சேர் காங்கிரசில் இணைந்தேன் என்று கூறியதோடு, நீங்கள் மீண்டும் தவறாக யூகித்திருக்கிறீர்கள், நான்திமுகவிலிருந்து விலகினேன் என்று தெரிந்திருக்க நீங்கள் என் உதவியாளரும் இல்லை மக்கள் தொடர்பாளரும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அல்லது வதந்திகளை நீங்கள் நம்புவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.



மேலும், நீங்கள் எதற்காக திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தீர்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்ற தமிழிசையின் ட்வீட்டுக்கு ”அடுத்தவர்களின் மூளையை படிப்பதில் நீங்கள் சிறந்தவர் என்றால் எனது கொள்கை என்னவென்று சொல்லுங்கள். உங்களை நீங்களே அதிகம் வருத்திக்கொள்ளாதீர்கள்” என்று குஷ்பு பதில் அளித்துள்ளார்.



ரஜினியை கட்சியில் சேர்க்க கெஞ்சுவதாக குறிப்பிட்ட குஷ்புவின் ட்வீட்டுக்கு பதில் அளித்த தமிழிசை நல்லவர்களை கட்சிக்கு கொண்டுவர முயற்சிப்பது பிச்சையெடுப்பதாகாது. வார்த்தைகள் தான் எண்ணங்களை வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.



தமிழிசைக்கு பதிலளித்த குஷ்பு நான் உங்களது மொழியிலேயே தான் பதிலளித்தேன். நீங்கள் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படி பேச ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். உண்மையில் செயல்கள்தான் எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.


 பின்னர், தனது பாலோயர் ஒருவரது ட்வீட்டை ரிட்வீட் செய்து மோதலை குஷ்பு முடித்து வைத்தார்.


Related Posts: