வியாழன், 25 மே, 2017

யோகி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்கும் அலகாபாத் நீதிமன்றம்..!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற மனுவில், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் சஞ்சய் சர்மா என்பவர்,’முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியாவையும் பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர், மாநில அமைச்சராக இருக்கக்கூடாது. எனவே, யோகியையும் மௌரியாவையும் பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதிர் அகர்வால், வீரேந்திர குமார், ‘இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். 
http://kaalaimalar.in/yogi-adityanath-cm-alahabadh-govt-ordered/

Related Posts: