மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மாற்று ஆவணங்களை பயன்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல் எண்ணுடன் ஆதாரை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் மொபைல் எண் சேவை முடக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதார் எண் மட்டும் தற்போது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடாக குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகளை மொபைல் எண்ணுடன் இணைக்க பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கு மேற்கு வங்க முதலைமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.