வியாழன், 25 மே, 2017

மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் – ஆட்சியர் உத்தரவு!

மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் – ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் ஜூன் 1ம்தேதி முதல் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

ஜூன் 1-ஆம் தேதி முதல் உரம் வாங்க வருபவர்கள் தங்களின் ஆதார் எண் விவரங்களை விற்பனை முனை எந்திரத்தில் பதிவு செய்து தங்களின் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணும், கைரேகையும் ஒத்திருந்தால் மட்டுமே அடுத்த கட்டமாக வாங்கப்படும் உரம் அளவு விவரத்திற்கு செல்ல முடியும். 

மேலும் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக ரசீது வழங்கப்படும் எனவும், இதனால் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Posts:

  • பாலியல் வன்கொடுமை உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்........குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் ...சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெய… Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • அம்மா திட்டத்தின் அம்மா  திட்டத்தின் கீழ், ஒவ்வரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏராளமாக விரைவு  பணிகள் நடைபெற்றது. குடும்ப அட்டையில்  பெயர் இணைதல் … Read More
  • வெகுவாக பரவிய கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொ… Read More
  • கனமான மலை Photograph - RS Suhaib முபட்டி - 30/05/2013 மாலை 4.15 மணி முதல் - 4.50 வரை - கனமான மலை - கொட்டி தீர்த்தது - சுமார் 4C ,மழை பதிவானது.  வெப்பத்தி… Read More