தமிழகத்தின் பாரம்பரியமும் பண்பாடும் மிக்க தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை, வெளிநாட்டு அமைப்பான பீட்டா வழக்குத்தொடர்ந்து, தடை விதிக்கச் செய்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளை அடிபணியச் செய்தது. இதனையடுத்து, அவசர சட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் பெற்று நிறைவேற்றியது.


இந்நிலையில், சற்றும் எதிர்பாராத நிலையில், இன்று காளிமார்க் குளிர்பான நிறுவனத்தை நடத்திவரும் காளீஸ்வரி குழுமங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சுமார் 54 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனை ஏன், எதற்காக நடத்துகிறார்கள்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சியை சரிகட்டவும், இழந்த மார்க்கெட்டை நிலைநாட்டுவதற்காக, தற்போது வளர்ந்து வரும் உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை அடக்கி வைப்பதுதான் ஒரே வழி என கோக், பெப்சி நிறுவனங்கள் மறைமுக திட்டத்தை வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக கோக், பெப்சி நிறுவனங்கள் மத்திய அரசை தூண்டிவிட்டு, உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை முடக்க, ஐடி., ரெய்டு உள்ளிட்ட சோதனைகளை கொடுக்க முயன்றுள்ளது. இதன் காரணமாகத்தான் தற்போது காளீஸ்வரி குழுமங்களில் திடீர் சோதனைகள் தொடர்வதாகவும், கோக், பெப்சிக்காக உள்ளூர் காளிமார்க் கம்பெனிக்கு வந்த சோதனையாக அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.