செவ்வாய், 23 மே, 2017

ரேன்சம்மை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் EternalRocks வைரஸ்! May 22, 2017

ரேன்சம்மை விட மோசமான  பாதிப்புகளை ஏற்படுத்தும் EternalRocks வைரஸ்!


உலக நாடுகளை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ‘Wannacry ransomware' வைரஸைவிட மோசமான கணினி வைரஸான EternalRocks இணைய உலகின் அடுத்த தொல்லையாக களமிறங்கியுள்ளது.

ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். உலகம் முழுவதும் 3 லட்சம் கணினிகளுக்கு மேல் ஊடுருவி தன்னுடைய நாச வேலைகளில் ஈடுப்பட்டு வரும் இந்த வைரஸின் தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் ’Wannacry’ ரேன்சம் வைரஸை விடு படுமோசமான விளைவுகளை உருவாக்கக்கூடிய ‘EternalRocks’ எனும் இன்னொரு வைரஸ் தற்போது இணையத்தில் களமிறங்கியுள்ளதாக கணினி ஆராய்சியாளர்கள் பீதியை கிளப்புகிறார்கள். 

இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் ரேன்சம் வைரஸில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை(NSA) பயன்படுத்தும் இரண்டு சாப்ட்வேர் டூல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் எடர்னல் ராக்ஸிலோ, NSA பயன்படுத்தும் 7 டூல்கள் பயன்படுத்தப்படிருப்பதாக கணினி அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். EternalBlue, EternalChampion, EternalSynergy and EternalRomance உள்ளிட்ட டூல்களும் இதில் அடக்கம். இந்த ஒவ்வொரு டூலும் கணினியில் குறிப்பிட்ட சில நாசகர வேலைகளை செய்யும் வகையில் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டதாகும். சேன்சம் வைரஸை போன்று இதுவும் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் எளிதாக பரவும் தன்மைகளை கொண்டுள்ளதாக கணினி வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

shadow brokers எனப்படும் ஹாக்கிங் குழுதான் கடந்த மாதம் இந்த NSA டூல்களை திருடி வெளியிட்டுள்ளது. இந்த குழு அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணைகளின் தரவுகளைக்கூட ஹாக் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் மாதம் முதல் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ்களை வெளியிடவுள்ளதாக இந்த ஹாக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, உலக நாடுகளையே ஒரு பதற்றமான சூழலுக்கு தள்ளியுள்ளனர் வைரஸ்களை உருவாக்கும் இந்த ஹாக்கர்கள்.

Related Posts: