வியாழன், 11 மே, 2017

சுற்றுலாத் தலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்! May 11, 2017




கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், ஏரி மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நட்சத்திர ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏரியைச் சுற்றி வீசிச் செல்கின்றனர். அங்கு வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. 

மேலும், அழகாக காட்சியளிக்கும் ஏரி தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளால் பொலிவிழந்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் கூறியுள்ளனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: