வியாழன், 11 மே, 2017

விவசாயிகளிடம் வற்புறுத்தி கடன்களை வசூலிக்க கூடாது என உத்தரவு! May 11, 2017




விவசாய கடன்களை உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளிடம் வற்புறுத்தி கடன்களை பெறக்கூடாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தகுதி உள்ள விவசாயிகளுக்கு விரைந்து விவசாய கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால கடன்கள் அதிக அளவில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், விவசாய கடன்களை உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளிடம் வற்புறுத்தி கடன்களை பெறக்கூடாது என்றும், அவர்களிடம் ஜப்தி நடவடிக்களை மேற்கொள்ளகூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Related Posts: