குறிப்பிட்ட மொபைல் எண்ணிலிருந்து வரும் அழைப்பை ஏற்றால் உங்கள் கைபேசி வெடித்து சிதறி உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று வாட்ஸ் அப்பில் உலவும் தகவல் போலியானது என சமூக தொலைத் தொடர்பு ஊடக வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக 777888999 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாமென்றும், அவ்வாறு வந்தால் இணைப்பை துண்டிக்குமாறும், அல்லது அந்த எண்ணை பிளாக் செய்து விடுமாறும் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பொதுவாக கைபேசி எண்கள் 10 இலக்கங்களை கொண்டவை இந்நிலையில அந்த குறிப்பிட்ட எண் ஒன்பது இலக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது.
"URGENT ?pl don't attend any Call of mob no ...777888999....if u attend. Call your mobile will blast .....pl share to your friends ...,"

எனவே இந்த தகவல் போலியானது எனவும், இதுகுறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை எனவும் சமூக இணைய வல்லுநர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். மேலும் உலகில் இதுவரை ஒரு அழைப்பு மூலம் கைபேசியை வெடிக்கச் செய்யும் தொழில்நுட்பமும் உருவாகவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின் விளைவுகள் பற்றி கவலையுறாமல், வரும் அனைத்தையும் பார்வர்டு செய்வதை வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.