சமீத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அவரது பரபரப்பானப் பேச்சுக்குப் பின் தமிழக அரசியல் களத்திலும், ஊடகங்களிலும், பொதுமக்களிடத்திலும் அது விவாதப் பொருளாகி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நடிகர் ரஜினிகாந்த் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “தான் தென்னிந்திய மக்கள் மீது அதிக மதிப்பு வைத்திருப்பதாகவும் ஆனால் அவர்களது நடிகர்கள் மீதான முட்டாள் தனமான மோகம் குறித்து தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சிவாஜி கணேசன் படத்திற்கு சென்றதாகவும், அப்போது படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால் மட்டும் தெரிந்த போது வெறியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். இப்போது, தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது மோகம் கொண்டுள்ளனர். மேலும் சிலர் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனால் ரஜினிகாந்திடம் என்ன இருக்கிறது? தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளான பஞ்சம்,வேலைவாய்ப்பின்மை,ஊட்டச்சத்து குறைபாடு,மருத்துவ குறைபாடு, விவசாயிகளின் பிரச்னைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ள கட்ஜு, அவரிடம் தீர்வு எதுவும் இல்லை என்று நினைப்பதாக பதிலும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, அமிதாபச்சனைப் போல ரஜினிகாந்திற்கும் சிந்தனைத் திறன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.