பணமதிப்பு நீக்கம் கருப்புப் பொருளாதாரத்தை விட அமைப்பு சாராத் துறைகளின் வெள்ளைப் பொருளாதாரத்தையே அதிகம் பாதித்ததாகத் தெரிகிறது. பிரதமர் திடீர் பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. முதல் இரண்டு மாதங்களில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெருமளவு பாதிப்பைச் சந்தித்தனர். பெரும்பாலான மக்கள் கருப்புப் பணத்தை ஒழிக்க தாங்கள் மேற்கொள்ளும் தியாகமாக இந்த துன்பங்களை சகித்துக் கொண்டனர். பிரதமரும் ஐம்பது நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என உறுதியளித்தார். நிதியமைச்சரும் பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தின் மீதும் சமுதாயத்தின் மீதும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பணமதிப்பு நீக்கம் கருப்புப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய விளைவு தான் என்ன? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. கருப்புப் பணத்தை, பணமதிப்பு நீக்கத்தால் ஒழிக்க முடியவில்லை என்பதே குழப்பமற்ற ஒரே பதிலாக உள்ளது. அதிகமாக பணம் வைத்திருந்த பெரும்பாலானவர்கள் அதைப் புது நோட்டுகளாக மாற்றி விட்டார்கள். ஆனால் அரசோ 18 லட்சம் நிறுவனங்களுக்கு தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியதாக கூறியுள்ளது.
ஆனால் வங்கிக்கு வந்தப் பணம் அனைத்துமே முழுமையாகக் கருப்புப்பணமோ அல்லது வெள்ளைப்பணமாகவோ கொள்ள முடியாது. 2012-13 இல் கிடைத்தத் தகவலின் படி, 8 லட்சம் நிறுவனங்கள் 80 கோடி வருவாயுடன் இருந்ததது. அந்த வருட ஜி.டி.பியை விட இது 6.7 மடங்கு அதிகமானதாகும். ஆக, அந்த வருடம் கருப்புப் பொருளாதாரம் 570%. இந்த 8 லட்சம் நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தாலே, 200% ஜி.டி.பியை வரியாக மட்டுமே பெற்றிருக்கலாம். இன்று 5.5 % ஜி.டி.பியே வருமான வரி வழியாக வருகிறது. 8 லட்சம் பேரை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மொத்த கருப்புப் பொருளாதாரத்தின் பிரச்சினையையும் சரி செய்து இருக்கக் கூடிய நிலையில் பணமதிப்புநீக்க நடவடிக்கையால் 125 கோடிக்கும் அதிகமான இந்தியர்களையும் ஈடுபடுத்துவது அவசியமானதா என கேள்வி எழுகிறது.
அதுமட்டுமல்லாமல் 2009ஆம் ஆண்டின் படி அதிக மதிப்பு பணப் பரிவர்த்தனைகளின் விவரம் ஏற்கனவே இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தாமல், புதிதாக எடுக்கும் தகவல்கள் எந்த அளவிற்கு பயனாக இருக்கும் என்ற ஐயம் வலுக்கிறது. அரசு வெளியிடும் பொருளாதார விவரங்கள் அமைப்பு சார்ந்த துறைகளுடையது என்றும் அமைப்புசாரா துறைகளே இந்த பணமதிப்பு நீக்கத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது.
அப்போது அச்சுறுத்தலாக இருந்த ஆதார் அட்டை தற்போது அத்தியாவசியமாக்கப்பட்டிருப்பதிலேயே, அரசின் மேற்பூச்சான நடவடிக்கைகள் புலப்படுகிறது. அதே போல கருப்புப் பணம் ஏழை மக்களின் கணக்குகளைக் கொண்டு மாற்றப்படுதல், மருந்துகள், தங்கம், எரிபொருள் என மொத்தமாக சந்தைகளில் மாற்றப்பட்டன. பல பொருள்களின் விலையேற்றத்திற்குக் காரணமாய் அமைந்த பணமதிப்பு நீக்கத்தினால் பங்குச் சந்தையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பணமதிப்புநீக்க நடவடிக்கை தோல்விப்பாதையை நோக்கி செல்வதை உணர்ந்த அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமாக , கருப்புப்பண ஒழிப்பை மாற்றி பணமில்லா பரிவரித்தனை என பறைசாற்றியது. அதற்கு பின்னர், அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள், அதை அரசுக்கு செலுத்தி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஒரு அறிக்கை விடுத்தார்.
அதிகமாக முன்னேற்பாடுகளுடன் தொடங்கியிருக்க வேண்டிய பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள், தெளிவுக்குப் பதில் பல குழப்பங்கள் ஏற்படுவதற்கே காரணமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் கருப்புப்பணம் வைத்திருப்பவர்களாக பார்க்கப்படும் நிலை உள்ளதால் அரசியல்வதிகளும் வெளிப்படையாக எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. ஆதலால் இந்தியாவில் தற்போது நல்ல அரசியலும் சரிவான பொருளாதாரமும் உள்ளது.