சனி, 20 மே, 2017

அசாஞ்சே மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிடுகிறது ஸ்வீடன்! May 20, 2017

அசாஞ்சே மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிடுகிறது ஸ்வீடன்!


விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாஞ்சேக்கு எதிரான பாலியல் தாக்குதல் புகார் குறித்த விசாரணை கைவிடப்படுவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முக்கிய ராணுவ ரகசிய நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்கள் விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் வெளியாயின. இந்த இணைதயளத்தை நிறுவிய அசாஞ்சேவைக் கைது செய்ய பல நாடுகள் முயன்றன. இதையடுத்து அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சமடைந்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவர் மீது இங்கிலாந்து போலீசாரும் பல குற்ற வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில், இவருக்கு எதிராக ஸ்வீடனில் தொடரப்பட்ட பாலியல் தாக்குதல் குறித்த வழக்கைக் கைவிடுவதாக அந்நாட்டு போலீசார் அறிவித்துள்ளனர். விசாரணையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், ஈக்வடார் தூதரகத்தை விட்டு அவர் வெளியேறினால் உடனடியாகக் கைது செய்ய லண்டன் போலீசார் காத்துக்கொண்டுள்ளனர். 

Related Posts: