சனி, 27 மே, 2017

மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு மு.க.ஸ்டாலின், திருமாவளவன் கடும் கண்டனம்! May 27, 2017




நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக, நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை மூலம் மதச் சுதந்திரம், தனி மனிதச் சுதந்திரம், மதசார்பற்ற தன்மை, மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தடையை மத்திய அரசே வெளியிடுவது நல்லாட்சியின் இலக்கணம் அல்ல என்றும் பாஜக அரசின் மூன்று ஆண்டு கால தோல்வியை திசை திருப்பும் முயற்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை கோரி டெல்லியை சேர்ந்த வினித் சகாய் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு சிறுபான்மை மக்கள், விவசாயிகள் உரிமையை பறித்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் தொடர்ந்து மத்திய அரசு ஈடுபடுவதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அரசியல் சட்டத்தின் அடிப்படையான மதசார்பற்ற தன்மையை அடியோடு அசைத்துப் பார்க்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு கண்டனம் தெரிவித்தார்.

Related Posts: