திங்கள், 19 ஜூன், 2017

14 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வறண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் June 19, 2017

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது. இதனால், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், மக்களின் குடிநீர் தேவை கேள்விக் குறியாகி உள்ளது. 

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் விளங்குகின்றன. இவற்றுடன் வீராணம் ஏரியும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடும் வறட்சி, பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளும், வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் 4 ஏரிகளும் ஒரே நேரத்தில் முழு வறட்சியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் சென்னை குடிநீர் வாரியம், நாள்தோறும் விநியோகிக்கும் குடிநீரின் அளவை 850 மில்லியன் லிட்டரில் இருந்து 550 மில்லியன் லிட்டராக குறைத்துள்ளது. மேலும், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 

கட்டண முறையில் குடிநீர் பெற விரும்பினாலும், அதற்காக பதிவு செய்வோர், 10 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கல் குவாரிகளில் தேங்கி உள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு, கடந்த 9ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, சோதனையான இந்த கால கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, வறட்சியை சந்தித்த 4 ஏரிகளையும் தூர்வார வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Related Posts:

  • உடல் பலம் பெற ஓமம் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ… Read More
  • ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு..!! 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது… Read More
  • 10th Result  MKPatti - first place A.Hajee Mohamed, 2) nizar, 3) Raja Mohamed (MMS)  MKPatti - first place I Abdul Basid, MTMS,    … Read More
  • நல்ல காலம் இதுதான் நல்ல காலம்..!~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 2014இல் ஜம்மு- காஷ்மீரில் பெரு வெள்ளம் ஏற்பட்டுப்பயிர்கள் நாசமாகின. விவசாயிகள் கடும் துன்பத்துக்கு ஆ… Read More
  • எண்ணெய்! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஒரே இலக்க… Read More