பெற்றோர் கல்விக் கட்டணம் செலுத்தாததால் அவர்களின் 2 பெண் பிள்ளைகளை அரை நிர்வாணமாக்கி பள்ளி நிர்வாகம் ஒன்று சித்ரவதை செய்த கொடூரம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகாரின் பெகுசராய் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் வசூலிப்பதில் மிகவும் கண்டிப்பு காட்டி வந்த நிலையில் அங்கு படித்துவரும் சகோதரிகள் இருவருக்கான கல்வி கட்டணம் அவர்களது தந்தையின் ஏழ்மை நிலையால் செலுத்த முடியாமல் போனது.
கல்வி கட்டணத்தை செலுத்துமாறு அந்த குழந்கைளின் தந்தையை பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் கூடுதல் கால அவகாசம் கேட்டதால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் இரண்டு குழந்தைகளின் சீருடைகளையும் களைந்து அவர்களை அரை நிர்வாணமாக்கி வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.