திங்கள், 19 ஜூன், 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் June 19, 2017

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக யாருடைய பெயரையும் குறிப்பிட்டு, வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றது தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், அவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டதாக செய்தி வெளியானது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக யாருடைய பெயரையும் குறிப்பிட்டு, வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தவில்லை என தெரிவித்துள்ளது. 

Related Posts: