அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத கிராமங்களில், இன்னும் முழுமையாக கழிவறைகள் கட்டப்படவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தவிர்க்கும் விதமாக, கிராமங்கள் முழுவதும் கழிவறைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, வரும் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து கிராமங்களிலும், கழிவறைகள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத கிராமங்களில், இன்னும் முழுமையாக கழிவறைகள் கட்டப்படாதது சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2 லட்சத்து 959 கிராமங்களில், 52,593 கிராமங்களில் 100 சதவீத கழிவறை வசதிகள் இல்லாதது தெரியவந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் கழிவறைகளை கட்டி முடிக்க அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.