திங்கள், 19 ஜூன், 2017

நித்யானந்தா சீடர்கள் - பொதுமக்கள் மோதல்! June 18, 2017

சென்னை அருகே பல்லாவரத்தில் நித்யானந்தா சீடர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கார்களையும் பொருட்களையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

சென்னை அருகே பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் இரண்டேகால் ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 17 குடும்பத்தினர் வீடுகள் கட்டி 45 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்து வருகின்றனர். இந்தப் புறம்போக்கு நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், ராமநாதன் மகள் வள்ளி தலைமையில் சிலர், நித்யானந்தரின் சீடர்கள் எனக் கூறிக் கொண்டு இந்த நிலத்தில் முகாமிட்டனர். இந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதில் இங்கு வாழும் 17 குடும்பத்தினருக்கும், நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே தகராறு நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று நித்யானந்தரின் சீடர்கள், பொதுவழியை அடைத்துச் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், நித்யானந்தர் சீடர்கனைத் தடுத்தனர். இதையடுத்து இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களைவீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். தாக்குப்பிடிக்க முடியாத நித்யானந்தரின் சீடர்கள் கன்டெய்னர்களில் அமைக்கப்பட்ட குடிலில் பதுங்கினர். ஆத்திரம் தீராத பொதுமக்கள் அங்கிருந்த கார்களின் கண்ணாடிகளையும் கண்ணில் பட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். செயற்கைக் குடில் மின்சாரத்தையும் துண்டித்து ஜெனரேட்டர்களையும் அடித்து உடைத்தனர்.

Related Posts:

  • மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் தேர்தல் சவுதி அரேபியா தேர்தலில்,வெற்றிபெற்ற பெண்களின்எண்ணிக்கை 20 ஆக உயர்வு மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதிஅரேபியாவில் தேர்தல் என்பதே அபூர்வம்ஆகும். இதற்கு மு… Read More
  • மீலாது விழா' அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!! ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!! இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த '… Read More
  • ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!! நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான்… Read More
  • #ஊடகபயங்கரவாதிகள் பேரதிர்ச்சியான செய்தி கசிந்தது. இந்தியா மற்றும் உலகில் மூளை முடுக்குகளில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர்கள் யார்? யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? … Read More
  • முஸ்லிமல்லாத மாணவிகள் ஹிஜாப் அணிந்து ஆதரவு..! அமெரிக்காவில் இஸ்லாமியகொள்கைகளுக்கு,முஸ்லிமல்லாத மாணவிகள்ஹிஜாப் அணிந்து ஆதரவு..!அமெரிக்காவில் இஸ்லாமியகொள்கைகளுக்கு பெருகி வரும் ஆதரவு :முஸ்லிம் அ… Read More