புதன், 14 ஜூன், 2017

ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் ஆபத்து! June 14, 2017

ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் ஆபத்து!


ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் மரணம் அடைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதய நோய், பக்கவாதம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்ள, சில மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ரத்தம் கட்டியாவதை தடுக்கும் தன்மை கொண்டதால், இந்த மாத்திரையை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால், ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் ரத்தப் போக்கு ஏற்பட்டு மரணம் அடைவதாக சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான முதியவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் உட்கொள்வதாகவும், இதனால் ஆண்டுக்கு 20,000 பேர் ரத்தப் போக்கால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் உட்கொள்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: