பொதுத்துறை வங்கிகளில், 12 பேர் வாங்கிய ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கான வராக்கடன்கள் குறித்து ஆய்வு செய்ய, ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்குழு சமீபத்தில் பரிந்துரை செய்தது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேர், பொதுத்துறை வங்கிகளில் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய்கும் மேல் கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வர வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், கடன் வாங்கி செலுத்தாத 12 பேரின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாடு முழுவதும் வங்கிகளில் வாராக் கடனாக 7 லட்சம் கோடி உள்ளது. அதில் 12பேரின் கணக்கில் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.