சனி, 17 ஜூன், 2017

மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அனுப்பிய அறிவுரை! June 17, 2017

மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அனுப்பிய அறிவுரை!


தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பசு காவலர்கள் மீது ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 11-ந் தேதி தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் அதிக பால் தரும் கலப்பின பசுக்களை வாங்கி வந்த போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பசு பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு, பசு பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அனுப்பிய அறிவுரையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும், சட்டத்தை கையில் எடுப்பவர்களை சகித்துக் கொள்ள வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts: