சனி, 17 ஜூன், 2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! June 17, 2017




கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இன்று காலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ளது. மர்ம நபர்கள் சிலர் அந்த அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதி வழியாக நடை பயிற்சிக்காக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பெட்ரோல் குண்டு வீச்சில்  அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் கட்டடத்தில் மாட்டப்பட்டிருந்த பெயர் பலகை உள்ளிட்டவை சேதமடைந்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறை துணை ஆணையர்  லக்ஷ்மி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் மதவாத சக்திகள் இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Related Posts: