ஞாயிறு, 18 ஜூன், 2017

கியூபாவுடனான ஒப்பந்தங்கள் ரத்து! June 17, 2017




கியூபாவுடன் பாரக் ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார். டொனால்டு டிரம்பின் நடவடிக்கையைக்  கண்டித்தும் ஆதரித்தும் இருபிரிவினர் மியாமியில் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கியூபாவுக்குச் சுற்றுப் பயணம் செல்லும் அமெரிக்கர்களுக்கும், கியூபா ராணுவத்துடன் தளவாட வணிகத்தில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கியூபாவுடன் பாரக் ஒபாமா செய்துகொண்ட உடன்படிக்கையை ரத்து செய்தும் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவில் வாழும் கியூபா மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

சொந்த நாட்டுக்குச் சென்று வரும் சுதந்திரத்தையும் தங்கள் வணிக உரிமையையும் பாதிக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்காவின் வணிக நலனில் அக்கறையுள்ளவர்கள் அதிபரின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இரு பிரிவினரும் மியாமி நகரில் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts: