ஆட்சியை தக்க வைப்பதிலேயே அரசு குறியாக இருப்பதாகவும், நதிநீர் பிரச்சனை குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திர மாநில எல்லையான வேலூர் மாவட்டம் திம்பம் பகுதியில் கட்டப்படும் தடுப்பணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர அரசின் நடவடிக்கையின் காரணமாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் நதிநீர் பிரச்னைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க நதி நீர் பாதுகாப்பு கமிட்டியை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாமலும் இருப்பது தமிழக அரசுக்கு வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.