ஞாயிறு, 18 ஜூன், 2017

ஸ்டாலினுக்கு தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பதிலடி June 18, 2017

அதிமுக ஆட்சி கலையும் என்கிற மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜூலை1 ந்தேதி முதல் அமலாக உள்ளதாகக் கூறப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஜவுளி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரியில் ஊனமுற்றோருக்கு சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அருண் ஜேட்லியிடம் தாம் வலியுறுத்தியதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டுமா அல்லது நீடிக்கக் கூடாதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், ஆட்சி கலையும் என்று நினைக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என்றும் கூறினார். 

Related Posts: