புதன், 21 ஜூன், 2017

கள்ளக்குறிச்சி பெட்ரோல் விற்பனையகத்தில் நூதன மோசடி June 21, 2017




கள்ளக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்கில், அளவு குறைவாக பெட்ரோல் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இரவு நேரங்களில் பெட்ரோல் விற்பனையில் மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி சமூக வளைதலத்தில் வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. 

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவர் அந்த பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். ஆனால் சிறிது தூரத்திலேயே பெட்ரோல் இல்லாமல் அவரது வாகனம் நின்று விட்டது. இதனால் சந்தேகமடைந்த தமிழ், மீண்டும் சென்று பாட்டிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார். அப்போது இயந்திரத்தில் ஒரு லிட்டர் காண்பித்த நிலையில், பாட்டிலில்  250 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரம்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். பெட்ரோல் பங்கில் மோசடியாக அளவு குறைத்து பெட்ரோல் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: