ஜிஎஸ்டி மசோதாவால் சிவகாசியில் பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பட்டாசு மற்றும் அச்சக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சுத் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. இந்நிலையில், பட்டாசு தொழிலுக்கு ஏற்கனவே 12 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழில் முற்றிலும் நலிவடைந்து விடும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பிரிண்டிங் தொழிலுக்கு இது வரை தனி வரி விதிக்கப்படாத நிலையில், தற்போது 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அச்சக உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலை நம்பி பல லட்சம் தொழிலளர்கள் உள்ள நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால், அனைத்து தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சக உரிமையளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அச்சக தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.