ஞாயிறு, 25 ஜூன், 2017

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பேன் என மீரா குமார் பேட்டி! June 24, 2017

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பேன் என மீரா குமார் பேட்டி!


குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவேன் என எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்துள்ளார். 

நமது டெல்லி செய்தியாளர் சரோஜ் கண்பத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதும், அனைத்து மதத்தவர்களையும் அரவணைத்துச் செல்வதும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட மீரா குமார், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, தான் பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். 

கொள்கை அடிப்படையிலேயே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட மீரா குமார், அத்தகையக் கொள்கை, வெற்றி பெற வேண்டியது நாட்டிற்கு அவசியம் என தெரிவித்தார். 

எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கு  வாக்களிக்க வேண்டும் என்றும் மீரா குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.