உத்தரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத் அருகே முதபாண்டேயா பகுதியில், திருமணத்தின் போது கேட்கப்பட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என கணவன் குடும்பத்தினர் பெண்ணை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினர் அந்த பெண்ணை உயிருடன் தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்ணை தீவைத்து எரித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.