வியாழன், 20 ஜூலை, 2017

100 வது நாளை எட்டிய நெடுவாசல் போராட்டம்! July 20, 2017




நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. 

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி தொடங்கிய நெடுவாசல் மக்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது. நெடுவாசல் போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களும் திரைத் துறையினரும் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்றைய 100 வது நாள் போராட்டத்தில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் கௌதமன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நெடுவாசல் விவசாயிகள் குரல் கொடுத்தும் ஆளும் கட்சி செவி சாய்க்காத நிலையில், போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts: