வியாழன், 20 ஜூலை, 2017

தனிநபர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து! July 20, 2017




முழுமையான தனி நபர் உரிமை என்பது இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்றைய விசாரணையின் போது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், முழு தனி நபர் உரிமை என்பது கிடையாது என தெரிவித்தனர். தனி நபர் உரிமை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.

Related Posts: