வெள்ளி, 21 ஜூலை, 2017

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் மூடப்படும் 85 பள்ளிகள்! July 21, 2017




ஜம்மு& காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களால் எல்லைப்பகுதியில் உள்ள 85 பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு & காஷ்மீரின் எல்லைக் கட்டுபாட்டு பகுதிகளான நவ்ஷேரா மற்றும் மஞ்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்வதாலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாலும், அப்பகுதியில் உள்ள 85 பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ரஜோரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால், பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவதாக கூறினார்.

Related Posts: